Thursday, January 10, 2008

மொழியானவளே..!

நான் - உறக்கம்
நீ - கனவு

உன் வரவுக்காகவே
விடிய விடியத்
தூங்குவேன்

*
என்னைத் தொலைக்காமல்
உன்னைத் தேடினேன்
என்பதில் பெருமை எனக்கு

என்னை நான் தேடவே நீ
கிடைத்தாய் என்பதில்
பெருமை உனக்கு

*

என் சொந்தங்களில் நான்தான்
முதல் கவிவாசகன் என்பதில்
சிறியகவலை எனக்கு

இதுவரை யாருமே உன்னை
பார்த்து யார் எழுதியது என்று
விசாரித்ததில்லையே

*
உன் தாயைப்போல்
என் நேரமும்
உன்னைக் கவனிக்க
என்னால்
முடியாமல் போனாலும்

உன்னைக்
காணத நேரங்களில்
தாயாக நான் ஏங்கித்
தவிப்பதுண்டு

*
உனக்காக காத்திருந்தால்
என் கால்கள் வலிப்பதில்லை

என் மனசு ஏறி நிற்பதால்
என் தலைதான் வலிக்கும்


-யாழ்_அகத்தியன்

No comments: